வெளிநாடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் இலங்கையர் பலி!
துபாயின் ஷார்ஜாவில் பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டுனா பகுதியை சேர்ந்த 23 வயதுடைய தீலகா பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ஷார்ஜாவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் அருகே கிடந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு, பின்னர் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம்
எனினும் மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கடுவெலயில் உள்ள போமிரியா கல்லூரியின் முன்னாள் மாணவரான தீலகா பெரேரா, ஒரு வருடத்திற்கு முன்பு வேலைக்காக துபாய்க்குச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் வெளியுறவு அமைச்சகம், திங்கட்கிழமை பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், மரணம் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுவதால், அவரது உறவினர்கள் அதிகாரிகள் தலையிட்டு நியாயமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
