இலங்கையில் சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
sri lanka
drivers
license
By Thavathevan
இலங்கையில் சாரதிகளின் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவினால் (Dilum Amunugama) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றிலிருந்து ஜூன் மாதம் 30 ஆம் திகதியுடன் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் காலாவதியாகும் திகதியிலிருந்து 06 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜூலை 01 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் காலாவதியாகும் திகதியிலிருந்து 03 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி