விடுதலைப்புலி செயற்பாட்டாளர்கள் 22 பேர் விடுதலை: 318 பேருக்கு எதிரான தடை நீக்கம்! ஐ.நாவில் ஜீ.எல்.பீரிஸ் தகவல்
G. L. Peiris
LTTE Leader
Sri Lanka Government
By Kiruththikan
தடை நீக்கம்
விடுதலைப் புலி ஆதரவாளர்கள் 318 நபர்கள் மற்றும் 4 அமைப்புக்களுக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிச் செயற்பாட்டாளர்கள் விடுதலை
மேலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தடை நீக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனவர்களுக்கு நட்டஈடு
காணாமல் போனவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக மேலும் 53 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கமும் 216 விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களுக்கு எதிரான தடையை நீக்கியிருந்தது என சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

