இலட்சக்கணக்கில் வெளிநாடு பறக்கும் இலங்கையர்கள் : வெளியானது விபரம்
நவம்பர் 2024 இல், 22,685 இலங்கையர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்து வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவின்படி, நவம்பர் 2024 இன் இறுதிக்குள் கடந்த 11 மாதங்களில் 291,267 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர், இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.9% அதிகரிப்பாகும்.
அதன்படி, 2023 ஜனவரி முதல் நவம்பர் வரை 274,265 பேர் வேலைக்குச் சென்றுள்ளனர்.
ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதி
இவ்வருடம் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 178,914 புலம்பெயர் தொழிலாளர்கள் சுயதொழில் முறையின் கீழ் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ளதுடன் 112,853 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக பதிவு செய்து வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.
210,108 பேர் திறமையான வேலைகளுக்காகவும் 81,159 பேர் குறைந்த திறன் கொண்ட வேலைகளுக்காகவும் வெளியேறியுள்ளனர். 2024 வெளிநாடு சென்றவர்களில் 172,746 ஆண் தொழிலாளர்கள் மற்றும் 118,521 பெண் தொழிலாளர்கள் அடங்குவர்.
அதிகளவானோர் குவைத்திற்கு பயணம்
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை, குவைத்திற்கு(kuwait) அதிக எண்ணிக்கையிலானவர்கள் வேலைக்காக சென்றுள்ளனர், இந்த தொகை 71,210 ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு(uae) 48,083 பேரும், சவுதி அரேபியாவுக்கு(saudi) 45,008 பேரும், கத்தாருக்கு(qatar) 43,104 பேரும், இஸ்ரேலுக்கு(israel) 9,146 பேரும், ஜப்பானுக்கு(jaoan) 7,983 பேரும், தென் கொரியாவுக்கு (south korea)6,925 பேரும் சென்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |