அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு விதிக்கப்பட்ட 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Sri Lanka Australia
By Jaso Dec 19, 2024 07:39 AM GMT
Report

அவுஸ்திரேலியாவின் (Australia) மெல்பேனில் இலங்கை (Sri lanka) பெண்ணான நிலோமி பெரேரா, இலங்கையைச் சேர்ந்த அவரது முன்னாள் கணவரால் கத்தி மற்றும் கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குறித்த நபருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை அந்நாட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 03 ஆம் திகதி மெல்பேன் சான்டேஸ்ட் என்ற இடத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு முன்னால் வைத்து தனது முன்னாள் மனைவியை இவர் மோசமாக தாக்கியுள்ளார்.

இதன்போது தலை, முகம் கழுத்து பகுதியில் மோசமான தாக்குதலுக்கு இலக்கானார். இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கத்தி மற்றும் கோடரி கொண்டு தாக்குதல்

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து முன்னாள் கணவரான டினுஷ் குரேரா (Dinush Kurera) தனது முன்னாள் மனைவி மீது கத்தி மற்றும் கோடரியை கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு விதிக்கப்பட்ட 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை | Sri Lankan Jailed For 37 Years In Australia

இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் 2021 இல் பிரிவதென தீர்மானித்துள்ளனர். இதனையடுத்து அந்த ஆண்டில் டினுஷ் குரேரா இலங்கைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து மனைவியான நிலோமி பெரேரா விவகாரத்துக்கான திட்டங்களை தயார் செய்ததுடன் நீதிமன்றில் கணவர் வீட்டிற்கு வருவதற்கான தடை உத்தரவையும் பெற்றிருந்தார்.

இலங்கை வரலாற்றில் 16 நாட்களில் விடுதலையான பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்

இலங்கை வரலாற்றில் 16 நாட்களில் விடுதலையான பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்

நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி தாக்குதல்

இந்த நிலையில் டிசம்பர்03, 2022 அன்று நீதிமன்ற தடை உத்தரவை மீறி கோடரி, கத்தி மற்றும் எரிபொருள் கானுடன் வீட்டின் பின்வேலியை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு விதிக்கப்பட்ட 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை | Sri Lankan Jailed For 37 Years In Australia

இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றில் இவர் குற்றவாளி என கண்டறியப்பட்டதை அடுத்து அவருக்கு விக்டோறியா நீதிமன்றம் 37 வருடங்கள் சிறைத்தண்டனையை விதித்தது. இவர் 30 ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்படுவார். தற்போது அவருக்கு 47 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் கப்பல் மீது மோதிய இந்திய கடற்படை கப்பல் :பலர் பலி

பயணிகள் கப்பல் மீது மோதிய இந்திய கடற்படை கப்பல் :பலர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016