வெளிநாட்டவரை மிரட்டி 3 மில்லியன் ரூபா கப்பம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்
பிரேசில் நாட்டவர் ஒருவரைப் பணயக்கைதியாகப் பிடித்து வைத்து, 3 மில்லியன் ரூபாயை பிணைப்பணமாகக் கோரிய மூன்று நபர்களை உனவட்டுன சுற்றுலான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பிரேசில் நாட்டவர் காலி, தல்பேவில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது, அங்கு வந்த இரண்டு நபர்கள் தங்களை சுற்றுலா காவல்துறையினர் என்று கூறி அறையைச் சோதனையிட்டுள்ளனர்.
அதன்போது, குறித்த சந்தேகநபர்கள், அந்த வெளிநாட்டவரின் பிரேசில் கடவுச்சீட்டு, அமெரிக்க ஆவணங்கள், கைபேசிகள் மற்றும் பல பொருட்களை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டுள்ளனர்.
3 மில்லியன் ரூபாய்
பின்னர், மற்றொரு நபர் அந்த இடத்திற்கு வந்து, அவரும் அந்தப் போலி காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து அந்த வெளிநாட்டவருக்குக் கைவிலங்கிட்டு அவரிடமிருந்த 3 மில்லியன் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து, உனவட்டுன சுற்றுலா காவல் பிரிவின் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
இதேவேளை, இந்தக் குற்றத்தைச் செய்ய சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஆல்டோ காரையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் வழக்கு ஆவணங்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |