ஐ.நா குழுவால் அதிரடி மிசன்கள்! பாடகர் பிணையும் சாலே உயிர் பிரிவு பரபரவும்
சாவகச்சேரி நீதிமன்றம் வார இறுதி விடுமுறைக்கு செல்வதற்கு முன்னர் நேற்று வெள்ளிக்கிழமை சொல்லிசை பாடகர் சங்கீதனுக்கு பிணையை வழங்க அரச தரப்பு தமது சட்டத்துறையின் யுத்திகளை மாற்றியமைக்குரிய காரணகாரியங்கள் பகிரங்கப்படுகின்றன.
பாடகர் மீதான பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு இப்போது தண்டனைச் சட்டத்தின் கீழான வழக்காக மாற்றப்பட்டு பிணைவிடுதலை வழங்கப்பட்டது.
பாடகர் தடுப்புக்காவலில் இருந்து வெளியேறிய போது அவருடன் கூட நின்று ஊடகங்களின் கமராக்களுக்கு பளிச்செனத் தெரியும் படி அனுர தரப்பு எம்.பி இளங்குமரனும் நின்றார்.
இந்தவிடயத்தில் தானே அரசியல் செய்த நிலையில் ஏனையகட்சிகள் பாடகர் விடயத்தில் அரசியல் செய்வதாக அவர் குறிப்பிட்டமை ஈயத்தை பார்த்து பித்தளை ஈயென இளித்த கதையை நினைவூட்டியது .
ஆனால் ஐ.நாவின் சித்திரவதைகளுக்கு எதிரான நால்வர் அடங்கிய குழு (Subcommittee on Prevention of Torture ) ஏழுவருடங்களுக்கு பின்னர் நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கைக்கு சென்று அங்கு. 10 நாள் தங்கியிருந்து ஆய்வுகளை செய்யவுள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுரேஷ் சலே போன்றவர்களும் தடுப்புகாவல் மனஅழுத்தங்கள் குறித்த பரபரப்புகளை எகிற வைக்கிறது.
ஐ.நாகுழுவின் வருகையை முன்னுறுத்திய நகர்வுகளை அரசதரப்பும் செய்யும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! . |