தப்பியோடும் இலங்கை இராணுவ அதிகாரிகள்..!
பிரிகேடியர் உட்பட 13 இலங்கை இராணுவ அதிகாரிகள் தனிப்பட்ட பயணமாக வெளி நாடு சென்று நாடு திரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு இலங்கை இராணுவ அதிகாரிகள், அவர்களின் படைப்பிரிவுத் தளபதிகளிடம் அனுமதி பெற வேண்டும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக் களத்திற்கும் விளக்கமளித்துள்ளது.
இராணுவ சேவையை விட்டு வெளியேறி, திறமையான அதிகாரிகள் உட்பட பெரும்பாலான அதிகாரிகள் வெளிநாடு செல்ல ஆரம்பித்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
