முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு! பெண்களுக்கு புதிய அறிவிப்பு
நூற்றுக்கணக்கான முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெற போவதாக வந்த தகவலின் காரணமாக கண்டி வலயத்தில் உள்ள 203 பள்ளிவாசல்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு முதல் காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பெண்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
முஸ்லிம் பெண்களை பரிசோதிக்க முடியாது என்ற நிலையில், அபாயா போன்ற ஆடைகளை அணிந்து ஆண்கள் உள்ளே வருவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
எனவே அபாயா போன்ற ஆடைகளை அணிந்து வரும் பெண்கள் அடையாள அட்டையைக் கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் வழமை போன்று பாதுகாப்பு காணப்படுவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
