இலங்கையிலிருந்து நெதர்லாந்திற்கு அனுப்பப்படவுள்ள அலங்கார மலர்கள்
சர்வதேச சந்தையில் இலங்கையின் விவசாயப் பொருட்களுக்கு அதிக தேவை இருப்பதால், அந்த சந்தையை கைப்பற்றுவதில் இலங்கை அரசாங்கமும் வர்த்தகர்களும் ஆர்வம் காட்ட வேண்டும் என இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹொப்ச் (HE Bonnie Horbach) தெரிவித்துள்ளார்.
அதற்குத் தேவையான ஆதரவை வழங்க முடியும் எனவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நெதர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் விவசாய அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
விவசாய தொழில்நுட்பம்
விவசாய அம்சங்கள் குறித்து நெதர்லாந்து தூதரகத்தின் தூதுவர் மற்றும் ஆலோசகர் மிச்சியல் வான் எர்கல் மற்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோர் கலந்துரையாடினர்.
இதன்போது தற்போது நெதர்லாந்து பயன்படுத்தும் புதிய விவசாய தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.
கென்யாவில் இருந்து நெதர்லாந்துக்கு அலங்கார மலர்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்க முடியும் என்றும் தூதுவர் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கை மலர் பயிர்ச்செய்கைக்கு சிறந்த வாய்ப்புள்ள நாடாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பூக்கள் இறக்குமதி செய்யப்படுவது குறித்து தூதுவர் வருத்தம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |