கடந்த 24 மணிநேரத்தில் பலர் கைது
Sri Lanka Police
Drugs
By Laksi
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 910 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், போதைக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக
மேலும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் காவல்துறை விசேட பணியகம் ஆகியவற்றின் தேடப்படும் பட்டியலில் இருந்த 14 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்கள் மீட்பு
கடந்த 24 மணி நேரத்தில் 65 கிலோ கிராம் ஹெரோயின், 136 கிராம் ஐஸ் மற்றும் 254 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி