சர்வதேச சந்தையில் தங்க விலை வீழ்ச்சி :வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (21) வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,155.68 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன் ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 64.84 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சியின் தாக்கம் இலங்கை சந்தையிலும் பிரதிபலிக்கக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
விலை நிலவரம்
இதேவேளை இலங்கையில் நேற்று (20) தங்க விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (19) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 351,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,937 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |