தமிழ் தேசிய அரிதாரிகளின்… அடடே என்ன ஆச்சரிய அங்கிடு தத்தங்கள்!
அங்கிங்கு எனாதபடி தமிழ் தேசிய அரிதார அரசியல்வாதிகளின் அங்கிடுதத்தங்கள் தொடர்ந்தும் வெளிப்படுகின்றன.
ஒரு புறத்தே சிறிலங்காவின் Online Safety Act ஆகிய நிகழ்நிலைக் காப்புச் சட்டம் கொழும்பு அதிகாரமையத்தால் கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்க்க வெற்றிவேல் வீரவேல் என முழங்கிய கட்சி தமிழரசுக்கட்சி.
ஆனால் அடடே என்ன ஆச்சரியம்.. அதே தமிழரசுக் கட்சியில் இதே நிகழ்நிலைக்காப்புச் சட்டம் என்ற பங்கருக்குள் கவர் எடுத்து இருந்தபடி தமிழ் தேசிய ஊடகங்களை நோக்கி கருடா சௌக்கியமாக என வினவி தீட்டிய மரத்திலே கூர்பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
இதேபோல இன்னொரு அடடே என்ன ஆச்சரிய ரகத்தில் அதேகட்சியில் இருந்து தமிழினத்தை முள்ளிவாய்கால்வரை கருவறுத்த முகங்களை வலிந்து நாடி தேடிச்சென்று கைலாகு கொடுத்து சந்தோசய கொள்ளும் முகங்களும் உள்ளன.
ஆனால் இன்னொரு அடடே என்ன ஆச்சரிய ரகத்தில் இதே முகம் மறுபுறத்தே முன்னாள் போராளிகளை கிளிநொச்சியில் தனக்கு முன்னால் கூட்டிவைத்து தனது சுயலாப அரசியலுக்கு கணக்கும் போட்டு கணக்கு விடுகிறது.
அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற முன்னாள் போராளிகளுடனான சந்திப்பின்போது உரையாற்றிய இந்த முகம் முன்னாள் போராளிகளை வேறு எவருக்கும் தமிழரசுக்கட்சியில் சேர தகுதி இருக்க முடியாது என்றது.
அடடே என்ன ஆச்சரியம் இதேமுகம தான் முள்ளிவாய்கால் பேரழிவுக்குபின்னரான வருடங்களில் தமிழர்களின் ஆயுதப் போராட்ட அரசியல் வழியை தான் ஆதரிக்கவில்லையென குறிப்பிட்டது.
இப்போது அடடே என்ன ஆச்சரியம் இதேமுகம்தான் இப்போது முன்னாள் போராளிகளை விடவேறு எவருக்கு தமிழரசுக்கட்சியில் சேர தகுதி உண்டு யோக்கியதை என வினா எழுப்புவது முன்னாள் போராளிகள் என்ற துருப்புசீட்டை வைத்து எடுக்கும் அங்கிடுதத்தங்கள் தான் இதேபோல யாழ்ப்பாண மக்களை உசத்திக்காட்டுகிறேன் பேர்வழி என கிளிநொச்சியில் வாழும் மலையக தொடர்பு மக்களை தூசித்து இழிவுபடுத்திய கிளாடியேற்றரும் இப்போது தனது கருத்துக்கு மன்னிப்புக்கோருகிறாராம்.
இதுவும் அடடே என்ன ஆச்சரிய ரகம் தான் இவ்வாறாக பல லிடயங்கள் உள்ள நிலையில் அவற்றைத்தொட்டு வருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்