உடைந்தது கூட்டணி..! விக்னேஷ்வரன்- மணிவண்ணன் வெளிநடப்பு

Election Commission of Sri Lanka Sri Lankan Peoples
By Kiruththikan Jan 13, 2023 10:33 AM GMT
Report

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் தரப்பு வெளியேறி உள்ளதாக தெரியவருகிறது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

உறுப்பினர்களுடன் பேசி இறுதி முடிவு

உடைந்தது கூட்டணி..! விக்னேஷ்வரன்- மணிவண்ணன் வெளிநடப்பு | Sri Lankan Political Crisis Election 2023

இது தொடர்பில் மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில், “தற்போது சில முடிவுகள் இணக்கம் காணப்பட்டாலும் சில முடிவுகளில் இணக்கம் காணப்படவில்லை. மேலும் கட்சி உறுப்பினர்களுடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்து விட்டு வெளியேறி சென்றுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பித்தளை விளக்குச் சின்னத்தில் போட்டியிட தமிழ்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

சின்னத்தில் ஏற்பட்ட முரண்பாடு மணிவண்ணன் மற்றும் விக்னேஸ்வரன் வெளியேற காரணம் என தெரிய வருகிறது.

க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பன புதிய கூட்டணியாக உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன.

மேலும் யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி, ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளிட்ட மேலும் சில தரப்புகள் ஒன்றாக போட்டியிட இதன்போது இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடன்பாடு ஏற்படுவதில் தாமதம்

உடைந்தது கூட்டணி..! விக்னேஷ்வரன்- மணிவண்ணன் வெளிநடப்பு | Sri Lankan Political Crisis Election 2023

ஆனாலும் கட்சிகளுக்கிடையே பொதுச் சின்னம் ஒன்றை கொண்டு வந்து உடன்பாட்டை ஏற்படுவதில் உள்ள தாமதம் காரணமாக கூட்டணி அறிவிப்பு தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் ஆசன பங்கீடுகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. நேற்றைய கலந்துரையாடலில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கட்சித்தலைவர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி இறுதி முடிவை எட்டுவதற்காக கலந்துரையாடியுள்ளனர்.

எந்த பொதுச்சின்னத்தில் போட்டியிடுவது, கூட்டணிக்கான பொதுப்பெயர், கூட்டணி ஒப்பந்தம் தொடர்பில் இதன்போது இறுதித்தீர்மானம் எட்டப்படவுள்ளது.

நாளை சனிக்கிழமை (14) கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வி.மணிவண்ணன், குருசாமி சுரேந்திரன், வி.பி.சிவநாதன், வ.பார்த்தீபன், வேந்தன்,துளசி, உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026