சிறிலங்கா பிரதமர் - அரச தலைவருக்கு இடையில் முரண்பாடுகள் : விரைவில் தேர்தலுக்கும் வாய்ப்பு
சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், அவருக்கும் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்துள்ளதாக தெரியவருகிறது.
நாட்டின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் பொறுப்புக்குரிய வகையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பொறுப்பு வழங்கப்பட்ட போதிலும், அவர் தற்போது 21ஆவது திருத்தம் உட்பட்ட மாற்றங்களுக்கு அவசரப்படுவதாக ஆளும் கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
எனினும் நாட்டின் பொருளாதாரம் குறித்து தான் எடுக்கும் தீர்மானங்களில் தலையிட வேண்டாம் என கோட்டாபய ராஜபக்சவுக்கு ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் 21ஆவது திருத்ததை நிறைவேற்றுவதற்குரிய ஆதரவை வழங்காமல் விட்டால் தான் பதவிவிலகப்போவதான சூசகங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதனால் சிறிலங்காவில் விரைவில் தேர்தல் ஒன்று நடத்தப்படும் வாய்ப்புள்ளதாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாட்டு மக்களுக்கு வழங்கிய உரையில் குறிப்பிட்ட விடயங்களால் சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கடுமையாக அதிருப்தியடைந்துள்ளனர்.
இதனையடுத்து பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச தலைவர் கோட்டாபாயவுக்கும் இடையில் இன்று மாலை ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/565b7e8e-f94d-4f8a-9cd2-d03f354ff545/22-6295033b84bfd.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)