கையை விரித்த பாதுகாப்பு தரப்பு - கோட்டாபயவுக்கு அச்ச நிலை (Video)
ஒரு சம்பவம் இடம்பெற முன்னர் அதனைத் தடுத்து நிறுத்துவது தான் புலனாய்வு பிரிவினரின் கடமை. ஆனால், இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் புலனாய்வு பிரிவு முற்றுமுழுதாக செயலிழந்து போயிருப்பதாக தான் தெரிகிறது.
ஆனால் மறுபகுதியில் போராட்டக்காரர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் மிகவும் சிறப்பாக இருக்கிறது என பிரித்தானியாவிலிருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரங்களை முன்கூட்டியே அறிந்து அதற்குரிய வியூகங்களை வகுக்க வேண்டியது புலனாய்வுத்துறையின் கடமை. ஒரு சம்பவம் இடம்பெற்ற பின்னர் விசாரணை செய்வது காவல்துறையினரின் கடமை என அவர் கூறினார்.
இதேவேளை, புலனாய்வுத்துறை செயலிழந்திருக்கிறது, இராணுவத்தினர் எதிர்பார்த்த முக்கிய செயற்பாட்டிலிருந்து விலகியிருக்கிறார்கள், மக்கள் தொடர்பிலே அவர்களது தன்மைகள் மாறியிருக்கிறது என்றால், இந்தச் செயற்பாடுகள் அத்தனையையும் பார்க்கின்ற போது இராணுவத்தை வைத்தே அனைத்தையும் செயற்படுத்திக் கொண்டிருந்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அதிர்ச்சி அல்லது அச்ச நிலை ஏற்பட ஏதாவது சந்தர்ப்பம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
உண்மை தான். ஏனென்று சொன்னால் மகிந்தவை பதவியிலிருந்து விலக்குவதற்கான கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் கோட்டாபயவிற்கு மாரடைப்பு வந்திருந்தது.
நெஞ்சுவலியிலிருந்து மீண்டு தான் அவர் அந்தக் கூட்டத்தையே நடத்தியிருந்தார். எனவே மிகப்பெரிய அழுத்தத்தில் தான் அவர்கள் இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
