கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை கப்பல்: அரபிக் கடலில் பதற்றம்
Sri Lankan Peoples
Sri Lanka Fisherman
By Dilakshan
சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையின் பல நாள் மீன்பிடி கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் கடற்றொழிலாளர்களை ஏற்றிச் சென்ற கப்பல் கடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி ஹலவத்த, டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட “லொரென்சோ சோன் 04” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலையும், 06 கடற்றொழிலாளர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகள்
இலங்கை கடற்பரப்பில் இருந்து 1160 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடத்தப்பட்ட கடற்றொழிலாளர்களையும் மீட்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி