இத்தாலியில் கொல்லப்பட்ட இலங்கை மாணவி -வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
இத்தாலியின் ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 17 வயதுடைய இலங்கை மாணவியை வெட்டி கொலைசெய்த குற்றச்சாட்டில் சக வயதுடைய இலங்கையை சேர்ந்த மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மரியா மிச்செல் கோர்சோ என்ற பாடசாலை மாணவியே படுகொலை செய்யப்பட்டவராவார்.
குப்பை மேட்டிற்கு கொண்டு சென்ற மாணவியின் சடலம்

சந்தேகநபர் சடலத்தை மறைப்பதற்காக குப்பை மேடு ஒன்றிற்கு எடுத்துச் சென்றதை பார்த்து சந்தேகமடைந்த மற்றுமொரு இத்தாலியை சேர்ந்த இளைஞர் விசாரித்துள்ளார். அதற்கு பதிலளித்த இலங்கை மாணவர் தான் பெரிய மீன்களை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.
எனினும் சந்தேகம் தீராத இளைஞர் அருகில் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரிக்கு அறிவித்துள்ளார். காவல்துறை உத்தியோகத்தர் வந்து சோதனையிட்ட போது, குப்பை மேட்டிற்குள் இந்த பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் காண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகத்திற்குரிய மாணவர் தப்பி ஓடியோடியுள்ளார், பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதல் உறவில்

சந்தேகத்திற்குரிய மாணவனும் இந்த மாணவியும் சில காலமாக காதல் உறவில் இருந்ததாகவும், மாணவி உறவை துண்டித்தமையால் ஏற்பட்ட வலி காரணமாகவே கொலையை மாணவன் செய்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாணவியின் தந்தைக்கு பல வீடுகள் உள்ளன, அவர் இந்த வீடுகளில் ஒன்றிலேயே கொல்லப்பட்டார். சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவலையடுத்து, மாணவியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்தியை இத்தாலி காவல்துறையினர் நேற்று (30.06.2023) கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை சந்தேகத்திற்குரிய மாணவனின் தாயும் தந்தையும் புத்தளம்- வென்னப்புவ, கட்டுனேரிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் கொலைசெய்யப்பட்ட மாணவியின் தந்தை ஊனமுற்றவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இத்தாலிய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.