மீண்டும் புலம்பெயர் இலங்கைத்தமிழர்களின் விபரீத முயற்சி - சிறுமி உட்பட நால்வர் வைத்தியசாலையில்
Sri Lankan Tamils
United Kingdom
Tamil diaspora
By Sumithiran
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியாவில் மேலும் இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நால்வர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இன்றைய தினம் 15 வயதுடைய சிறுமி ஒருவரும், கடந்த சனிக்கிழமை மூன்று ஆண்களும் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முன்னரும் உயிரை மாய்க்க முயற்சி
அதேவேளை முன்னதாக உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
அனுமதி வழங்கிய பிரித்தானியா
அவர்களில் இருவருக்கு மூன்றாம் தரப்பு நாடு ஒன்றில் குடியேறுவதற்கு பிரித்தானியா அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி