பிரித்தானியாவில் யாழ் இளைஞருக்கு நேர்ந்த துயரம்
லண்டனில், இலங்கைத் தமிழர் ஒருவரை நான்கு பேர் கத்தியால் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கத்திக்குத்து தாக்குதல் கடந்த (08) ஆந் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் ட்விகன்ஹாம் (Twickenham) பகுதியில் உள்ள ஸ்ட்ராபெரி ஹில் தொடருந்து நிலையத்திற்கு பிரித்தானிய போக்குவரத்து காவல்துறையினர் வந்நததையடுத்து லண்டன் நோயாளர் காவு சேவை மற்றும் பெருநகர காவல்துறையினரும் வருகை தந்து பரிசோதனை மேற்கொண்ட போது அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழர்
உயிரிழந்த இளைஞன் குறித்த தகவல்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. எனினும் அவர் இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள காரைநகரைச் சேர்ந்தவர் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 வரை கைது செய்திருந்த நிலையில் மூன்று ஆண்கள் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 16 வயது இளைஞன் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவந்தால் காவல்துறையினருக்கு தெரியப்படுத்துமாறு அவர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |