கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழன் - காவல்துறையினர் வேண்டுகோள்
கனடாவிற்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒன்ராறியோ - Vaughan நகரில் வசிக்கும் 43 வயதுடைய திவாகர் பரம்சோதி என்பவரே காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 19 ஆம் திகதியில் இருந்து இவரை காணவில்லை என தெரியவந்துள்ளது.
இதன்போது கடைசியாக கடந்த 19ஆம் திகதி மாலை 6 மணியளவில் தனது குடும்பத்தினருடன் பேசியதாகவும், அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்பு இலக்கம்

இந்நிலையில் குறித்த நபர் 5'5' அடி உயரம் கொண்டவரும், கடைசியாக சிவப்பு மற்றும் கருப்பு நிற உடை அணிந்திருந்ததாகவும் காவல்துறையினர் அடையாளப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் குறித்த நபரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மேற்படி நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் 1-866-876-5423 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 20 மணி நேரம் முன்