கடிதங்களை எரித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை திரட்டும் நடவடிக்கைகளுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தினால் பதிவுகள் மேற்கொள்ளும் இடத்திற்கு வருகை தந்து அமைதியான முறையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்புகள்

அதேசமயத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட கடிதங்கள் தீயிட்டு அழித்து தங்களின் எதிர்ப்புக்களை தெரிவித்தார்கள்.
கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் 08.07.2023 இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் ஜோகராஜா, கிளிநொச்சி பிராந்திய இணைப்பாளர் நிசாந்தன் ஜீட் பீரிஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும் போராடுவதற்கான உரிமை இருந்தாலும் பதிவுக்காக வருகை தருபவர்களிற்கு இடையூறு இல்லாமல் செயற்படுமாறும் ஆணையாளர் தெரிவித்தார்.
