எலான் மஸ்கின் Grok AI-க்கு இந்தோனேசியா அதிரடித் தடை!
எலான் மஸ்கின் எக்ஸ் வலைதள பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள Grok AI செயலிக்கு இந்தோனேசியா தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
Grok AI செயலி மூலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் படங்களை deepfakes முறையில் தவறாக சித்தரிப்பதாக முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, Grok AI செயலிக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு விளக்கம்
குறித்த விடயத்தை இந்தோனேசியா தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மெவுதியா ஹபீத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தவறான படங்கள் உருவாக்குவதும் மற்றும் விநியோகிப்பதும் சட்ட மீறல் என்றும் மனித உரிமைகள், கண்ணியம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்புக்கு எதிரானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, Grok AI மூலம் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து எக்ஸ் தளத்திடம் இந்தோனேசியா அரசு விளக்கம் கேட்டுள்ளது.
செயற்கை தொழிநுட்ப செயலிகளால் ஏற்படும் ஆபத்து குறித்து பல்வேறு நாடுகளும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இந்தோனேசியா முதல் நாடாக Grok AI செயலிக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |