அம்பலமான மோசடிகள் - பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோருக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்!

United Kingdom World
By Pakirathan May 24, 2023 08:04 AM GMT
Report

இலங்கையில் உள்ள முகவர்கள் மூலம் இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கு கடத்தப்படும் மோசடி குறித்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரதான ஆங்கில ஊடகம் ஒன்று இந்த விடயத்தினை அம்பலப்படுத்தியுள்ளது.

இதற்காக மோடிக்காரர்கள் 35,000 - 65, 000 ஸ்ரெலிங் பவுண்ட்களை பெற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு

அம்பலமான மோசடிகள் - பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோருக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்! | Sri Lankan Tamil People Came Uk Scam

வேலை வீசாவில் அங்கு செல்லும் இலங்கையர்களுக்கு வேலை இல்லை.

இதனால், மக்கள் பணத்தை இழந்து ஏதிலிகளாக மாற்றப்படுகிறார்கள் எனக் கூறப்படுகிறது.

ஆவணங்கள் பொய்யாக இருக்கும் நிலையில், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் முறையாக பரிசீலனை செய்யாது, தகைமை இல்லாத பட்சத்திலும் அவர்களுக்கு வீசா வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு பிரவேசித்த புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா முயற்சிகள் எடுத்து வந்தது.

பிரித்தானியாவின் கட்டுப்பாடுகள்

அம்பலமான மோசடிகள் - பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோருக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்! | Sri Lankan Tamil People Came Uk Scam

இந்த நிலையில், தற்போது சட்ட ரீதியாக பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் நபர்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த விரும்புவதாக பிரித்தானிய பிரதமர் ரிசி சுனக் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதேசமயம், மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

இதேவேளை, வேறொரு விதத்தில் பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்வோர் நுழைவது குறித்த விடயத்தை, பிரித்தானிய ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளன.

நடந்த மோசடி

அம்பலமான மோசடிகள் - பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோருக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்! | Sri Lankan Tamil People Came Uk Scam

சட்டப்படி பிரித்தானியாவுக்கு வரும் புலம்பெயர்வோர், மோசடி ஒன்றிற்கு உள்ளாகியுள்ள விவகாரத்தை பிரித்தானிய ஊடகங்கள் சில வெளிப்படுத்தியதால், மேலும் சில சிக்கல் நிலைமைகள் உருவாகக்கூடும் என்ற அச்சம் தோன்றியுள்ளது.

ராதா என்னும் இலங்கைத் தமிழர் ஒருவர், பல தலைமுறைகளாக இருந்த தனது சொத்துக்களை விற்று, முகவர் ஒருவருக்கு 50,000 பவுண்டுகள் செலுத்தி பிரித்தானியா செல்ல ஆயத்தமாகியுள்ளார்.

அவர் விமான நிலையத்திற்கு அடைந்தவுடன், அந்த முகவர் ஒரு பெண்ணை அவருடன் அனுப்பியுள்ளதுடன், அவருடன் சேர்த்து ஹிந்துஜன் என்னும் ஒரு சிறுவனும் அனுப்பப்பட்டுள்ளான். 

அந்த முகவர் ராதாவிடம், குறித்த பெண்ணை உங்கள் மனைவி என்றும், ஹிந்துஜனை உங்கள் மகன் என்றும் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

மறுத்தால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என மிரட்டப்பட்டதால், விமான பயணத்திற்கான நேரமும் நெருங்க, வேறு வழியில்லாமல், யாரோ ஒரு பெண்ணை தனது மனைவியாகவும், வேறு ஒரு சிறுவனை தனது மகன் எனவும் கூறி பயணிக்க நேர்ந்ததாக ராதா தெரிவித்துள்ளார்.

உருவாகியுள்ள சிக்கல்

அம்பலமான மோசடிகள் - பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோருக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்! | Sri Lankan Tamil People Came Uk Scam

இவ்வாறாக பலர், தமக்கு உடன்பாடு இல்லாத சூழ்நிலையில், வேறு சிலரை தங்கள் குடும்பத்தினர் என்று கூறி பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்கள்.

தங்களுக்குத் தெரியாமல் தங்களை கடத்தல்காரர்களாக பயன்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிரித்தானியா தனது பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக அறிமுகம் செய்த திறன்மிகு பணியாளர் விசாவைப் பயன்படுத்தி சிலர் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்புவது தெரியவந்துள்ளது.

இதனால் சட்டப்படி புலம்பெயர்வோருக்கும் இனி சிக்கல்கள் உருவாகும் எனக் கூறப்படுகிறது.

பிரித்தானிய ஊடகங்களும், இப்படி சட்டப்படியான விசாவைப் பயன்படுத்தி மோசடி செய்து புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்கு அனுப்பும் கும்பல்கள் குறித்து தீவிரமாக செய்தி சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

குறித்த விடயங்களால் கட்டுப்பாடுகள் மேலும் கடினமாகலாம் எனும் அச்சம் உருவாகியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026