தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு! திகதி அறிவிப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு ஜனவரி மாதம் 27, 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாகவும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
மத்திய குழு கூட்டம்
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் திருகோணமலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, எம்.ஏ. சுமந்திரன், சாணக்கியன், சிறீதரன், மற்றும் மாவை சேனாதிராஜா, தவராசா கலையரன், சீ.விகே சிவஞானம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
புதிய தலைவர் தெரிவு
இதன் போது, கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 2024 ஜனவரி 21 ஆம் திகதி பொதுச் சபை கூடி தலைவர் மற்றும் நிர்வாகிகளை தெரிவு செய்ய உள்ளதாகவும், 26 ஆம் திகதி மத்திய செயற்குழு கூட உள்ளதாகவும் 27ம் திகதி பொதுக்கூட்டம் இடம்பெற உள்ளதுடன் 28 ஆம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாடு இடம் பெற உள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |