அரசியல்வாதிகளின் அல்லக்கை அதிபர்களால் மலையக கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியில்
அரசியல்வாதிகளின் அல்லக்கை அதிபர்களால் மலையக கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக மலையகத்தின் பிரபல பாடசாலையான கொட்டகலை தேசிய பாடசாலை தொடர்பாகவும் தற்போதைய அப்பாடசாலையின் அதிபர் தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அரசியல், வியாபாரம், அட்டூலியங்கள் நடக்கும் இடமாக குறித்த பாடசாலை மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இ.தொ.கா வின் உதவியால் அதிபர்
தற்போதுள்ள அப்பாடசாலையின் அதிபர் சிவலிங்கம் slps பெற்றதும் நேரடியாக இ.தொ.கா வின் உதவியால் அதிபர் ஆனவர் என ஒரு சில தரப்புக்கள் கூறுகின்றன.
ஆளுமை, தலைமை பண்பு ஏதும் இல்லாத அவர் குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல தன்னுடை சுய நலத்திற்காக பாடசாலையை பயன்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
கோவில் போன்ற பாடசாலையை ஒரு கொடிய நிர்வாகம் நடத்தி செல்வதாகவும் பாடசாலை அதிபரும் நுவரெலியா வலைய கல்வி பணிப்பாளர் லசந்தவும் நல்ல நண்பர்கள் எனவும் அவரின் உதவியால் அவருக்கு வேண்டபட்டவர்களையும், ஆளுமை இல்லாதவர்களையும் மாலை வகுப்புகள் செய்து பண உதவி செய்யும் ஆசிரியர்களையும் வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்கிறார் எனவும் பொதுமக்கள் பல்வேறு முறைப்பாடுகளை வெளியிட்டு வருகின்றனர்.
மிக பெரிய தொகை இலஞ்சம்
பாடசாலை நலன் விரும்பி ஒருவர் இட்ட முகப்புத்தக பதிவில்,
''அவர்களிடம் மாதம் மாதம் ஒரு தொகையும் வாங்கி கொள்கிறார். இ.தொ.கா காரர் இல்லாத வேற எவர் பாடசாலைக்கு வந்தாலும் அவர்களை மிக இழிவாக நடாத்துதல், அவர்களின் திறமை,அனுபவம், தகமை இப்படி எதற்க்கும் மதிபளிக்காமல் அவர்களை மன உளைச்சலுக்கு கொண்டு செல்வார்.
குறித்த பாடசாலை என்பது ஒரு நகர பாடசாலை என்பதால் அதிகமான பகுதி நேர வகுப்புகள் இருக்கிறது. அதனால் மாணவர்கள் சிறந்த பெருபேறுகளை எடுத்து விடுவார்கள்.
ஆகவே வகுப்பரையில் திறமையான ஆளுமையான ஆசிரியர் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிபருக்கு இருப்பதே இல்லை.
அண்மையில் உயர்தரத்திற்கு மாணவர்கள் அனுமதிக்காக மிக பெரிய தொகை இலஞ்சமாக பணம் இரகசியமாக வாங்க பட்டிருந்த்தாக கூறபடுகிறது.
மேலதிக வகுப்புகளுக்கு ஆள் சேர்கவே அதிக மாணவர்களை சேர்கிறார்களாம். உயர்தர கணித, விஞ்ஞான ஆசிரியர்களே இந்த அட்டூலியங்களை முன்னின்று நடத்துகிறார்கள். இதை யாராலும் நிரூபிக்க கூட முடியாதாம். பணம் கொடுத்தவர்கள் தன்னுடைய பிள்ளையின் கல்வி பாதிக்கும் என்று இலஞ்சம் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.
வங்கி மீதி கோடி ரூபாய்
மாணவர்கள் கழுத்துக்கு கட்டாயம் tag அணிய வேண்டும் என்று உணவு இடைவேளை நேரம் அழைத்து தானே அவர்களுக்கு 200,300 ரூபாய்க்கு விற்பார்.
இப்படி கொள்ளை அடித்து தன் மகனை கடந்த மாதம் கோடி ரூபாய் வங்கி மீதி காட்டி கனடாவுக்கு அனுப்பி இருக்கிறார். இந்த கேவலமான நிர்வாகத்தினால் பழையமாணவர் சங்கத்தில் கல்வியால் உயர்ந்தவர்கள் எவரும் இணைய தயங்குகிறார்கள்.
பாடசாலையில் இருந்து வெளியேறிய பட்டதாரிகள் யாருமே இணைவதில்லை. முக்கிய விடயம் தனக்கு அறுவை சிகிச்சை இருக்கிறது என வலு கட்டாயமாக அடிக்கடி நிதி சேகரிப்பார் என கூறுகிறார்கள்.
அதே போல பாடசாலையின் உள்புறம் மற்றும் வெளிபுறங்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. எப்படியாவது இவ்வாறான தலை சிறந்த நமது மண்ணின் சிறந்த பாடசாலையை மீள கட்டி எழுப்ப இப்படிப்பட்ட விசமிகளை துரத்தியடிக்க பழைய மாணவர்கள் முன் வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
தற்போது இந்த பாடசாலையின் நிலைமையை இங்கு பதிவிடுகின்றேன்." என குறிப்பிட்டுள்ளார்.
அரசு கவனம்
அதிகரித்து வரும் பொருளாதார சுமைகளும் வாழ்வாதார சிக்கல்களும் மலையக மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் முட்டுக்கட்டையாக காணப்படுகிறது.
இவ்வாறிருக்க தனது சமூகத்தில் பல்வேறு கல்விமான்களை உருவாக்கவேண்டியது மலையக ஆசிரியர்களினதும் சமூக செயற்பாட்டாளர்களினதும் கடமையாக பார்க்கப்படுகிறது.
சமூகத்தில் எழும் இவ்வாறான குற்றச்சாட்டுகளின் உண்மை நிலை குறித்து இலங்கை கல்வி அமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக காணப்படுகிறது.
மாணவர்களின் கல்வியை பாதிக்கும் விசமத்தனமான செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
