வெளிநாடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் மீட்பு
மியன்மாரில்(myanmar) உள்ள சைபர் குற்ற முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்கள்(sri lankans) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பதினொரு இளைஞர்களும் இரண்டு இளம் பெண்களும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவருகிறது.
மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
அவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் தாய்லாந்து(thailand) எல்லையிலிருந்து பாங்கொக்கில்(banghok) உள்ள இலங்கை தூதரகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
இதற்கிடையில்,ஏனைய நால்வரும் மியான்மரில் தனித்தனி சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை விரைவில் மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதவி கோரிய அமைச்சர் விஜித ஹேரத்
தாய்லாந்து வெளியுறவு அமைச்சருக்கும் மியான்மர் துணைப் பிரதமருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) சமீபத்தில் உதவி கோரியிருந்தார். இதன் விளைவாக, இந்த இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
