தமிழகத்தில் தஞ்சமடையும் இலங்கையர் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Dr. S. Ramadoss
Sri Lanka Economic Crisis
Tamil nadu
Sri Lanka
By Sumithiran
Courtesy: தினமணி
அகதிகளாக அறிவிக்க வேண்டும்
இலங்கையில் இருந்து வந்த ஈழத் தமிழா்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கடுமையான பொருளாதார நெருக்கடி
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களில் 90 ஈழத்தமிழா்கள் தமிழகம் வந்துள்ளனா். ஆனால், அவா்கள் இதுவரை அகதிகளாக அறிவிக்கப்படவில்லை.
சட்டவிரோதமாக குடியேறியவா்களாக கருதி அடைத்து வைக்கப்பட்டுள்ளனா். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த ஈழத் தமிழா்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடிதம் எழுதி இரு மாதங்களாகியும் அதன் மீது மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
அதனால், ஈழத் தமிழா்களுக்கு உதவிகள் வழங்க முடியவில்லை.
அவா்களை அகதிகளாக அறிவித்து உதவிகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 20 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி