மனைவியிடமிருந்து விவாகரத்து : பாலில் குளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கணவன்
மனைவியிடமிருந்து விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சியில் 40 லீட்டர் பாலில் குளித்து கொண்டாடி தான் சுதந்திரமடைந்து விட்டதாக கணவன் தெரிவித்த விநோத சம்பவமொன்று நடந்துள்ளது.
இந்தியாவின்(india) அஸாம் மாநிலத்தில் நடந்த இந்த வினோத சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாணிக் அலி என்பவரே இவ்வாறு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த 40 லீட்டர் பாலில் குளித்தவராவார்.
மகளுக்காக மனைவியுடன் மீண்டும் இணைய முயற்சி
இவர் தனது மனைவியுடன் மகளுக்காக மீண்டும் இணைய முயற்சித்திருந்தார். ஆனால், அவரது மனைவி தொடர்ந்து தகாத உறவில் ஈடுபட்டு, குடும்பத்தை பலமுறை கைவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அலி, விவாகரத்து செய்ய முடிவெடுத்து, பிரிவைப் பெற்றார்.
நான் சுதந்திரமடைந்தேன்
இன்ஸ்டாகிராம் பக்கமொன்றில் பகிரப்பட்ட காணொளியில், வெள்ளை மேலாடை மற்றும் நீல ஜீன்ஸ் அணிந்த அலி, 40 லீட்டர் பாலை தனது உடலில் ஊற்றி, “நான் சுதந்திரமடைந்தேன்” என்று கமராவைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இந்த சம்பவம் அஸாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பரலியாபார் கிராமத்தில், முகல்முவா காவல் நிலையத்தின் கீழ் நடந்ததாகத் இந்திய ஊடக தகவல்கள் தெரிவித்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



