வெளிநாடொன்றில் வெடித்த வன்முறை: இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நேபாளத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை நேபாளத்தில் உள்ள இலங்கை தூதரகம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில் நடந்த போராட்டங்களால் நேபாளத்தில் உள்ள எந்த இலங்கையர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் உள்ள பெரும்பாலான இலங்கையர்கள் மாணவர் விசாவில் உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
விமான நிலையம் முடக்கம்
இந்த நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த போராட்டங்கள் இப்போது வன்முறையாக மாறியுள்ளன.
ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட போதிலும் நடத்தப்பட்ட போராட்டங்களின் போது, பிரதமர் ஒலியின் வீடு, ஜனாதிபதி ராம் சந்திர போதரின் வீடு, ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் மற்றும் பிற அரசியல்வாதிகள் குழுவின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அந்நாட்டின் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
25 பேர் கொலை
26 சமூக ஊடக வலைத்தளங்களை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றத்தின் முன் நேற்று போராட்டங்கள் தொடங்கின.
சமூக ஊடகத் தடைக்கு எதிராக வீதிகளில் இறங்கியவர்களில் பெரும்பாலோர் புதிய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டங்கள் காரணமாக 25 பேர் கொல்லப்பட்ட பிறகு நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
