வெளிநாடொன்றில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்
ஜோர்டானில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் குழுவொன்று, தம்மை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர அரசாங்கம் தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாம் ஜோர்டானில் தங்குவதற்கு விசா கூட இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
250க்கும் மேற்பட்ட இலங்கையர்கள்
ஜோர்டான் நாட்டிற்கு ஆடைத் தொழிலுக்காகச் சென்ற 250க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் குறைந்தபட்ச வசதிகள் கூட இன்றி பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாங்கள் பணிபுரியும் அசில் யுனிவர்சல் என்ற ஆடைத் தொழிற்சாலையின் அதிகாரிகள் தமக்கு உரிய சம்பளத்தை வழங்குவதில்லையெனவும், இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு இடமளிப்பதில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
சம்பளம் இல்லை
தமக்கு முறையான சம்பளம் வழங்கவும், நாட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கவும் அரசாங்கம் தலையிட வேண்டுமென அவர்கள் கோருகின்றனர்.
தாங்கள் பல வருடங்களாக ஜோர்டானில் தங்கியிருப்பதாகவும் பலரது விசா காலம் முடிவடைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |