பிற்கதவு தந்திரங்களால் பதவி பெற்ற சுமந்திரன்: பகிரங்கப்படுத்தும் மூத்த தமிழ் சட்டத்தரணி
நாடாளுமன்ற சுமந்திரன், சிபாரிசு கடிதங்கள் மூலமாகவும் பிற்கதவால் சொல்லப்படுகின்ற விடயங்கள் மூலமாகவே “ஜனாதிபதி சட்டத்தரணி” என்ற பதவியை பெற்றார் என மூத்த சட்டத்தரணியான என்.ஸ்ரீகாந்தா பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் நேற்று (16) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், "ஜனாதிபதி சட்டத்தரணி பதவியை படித்து பட்டம் வாங்கி பெறுவதாக நினைத்து கொள்ளாதீர்கள். அது ஜேபி அதிகாரிகளுக்கு நியமனம் வழங்குவது போன்றது.
அப்பதவியை பெறுவதற்கு, நான், 20, 25 வருடங்களாக சட்டத்தரணியாக இருக்கிறேன், என்னை ஜனாதிபதி சட்டத்தரணியாக ஆக்குங்கள் என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.
பிறகு, அதனை பரிசீலித்து அதனுடன் அனுப்புகின்ற சிபாரிசு கடிதங்கள், சான்றிதழ்கள் பார்த்து, மற்றும் பிற்கதவாலே சொல்லப்படுகின்ற விடயங்களையும் சேர்த்து அப்பதவியை கொடுப்பார்கள்.
முன்னதாக, 5 அல்லது 6 பேருக்கு அப்பதவி வழங்கப்பட்டது. பின்னர் யுத்த முடிவிற்கு பிற, ஒரு தமிழர் நாலைந்து முஸ்லிம் மீதமெல்லாம் சிங்களவர்கள் என 60 பேருக்கு மகிந்த ராஜபக்ச வழங்கினார் " என சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்த கருத்துகள் கீழ் வரும் காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |