விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டு கைதானவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை : ரணில் வாக்குறுதி
விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டு கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை மன்னார் (Mannar) நகரப் பகுதியில் இன்றைய தினம் (17) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரவிக்கையில், “மன்னாரில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே இங்கு வருகை தந்திருக்கிறேன்.
புதிய பாதை
புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சிப்போம்.
மன்னாரை மேம்படுத்தி மன்னாரில் இருந்து திருகோணமலைக்கு புதிய பாதை ஒன்றை அமைப்போம் அத்தோடு கமத் தொழிலை ஊக்குவிப்போம்.
இவையெல்லாம் செயற்படுத்த எம்மால் முடியும் எனவே 21 ஆம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |