எரிபொருளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்! விலை விபரங்களும் வெளியாகின
srilanka
price
fuel
peoples
By S P Thas
எரிபொருள் இறக்குமதி மீதான வரிகளை தற்காலிகமான இரத்து செய்யாவிடின் ஒரு லீற்றர் டீசலின் விலையை 52 ரூபாவினாலும், பெற்றோலின் விலையை 19 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும் என வலுசக்தி துறை அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எரிபொருளுக்கான வரி விலக்கு வழங்க வேண்டும் அல்லது எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும்.
இவ்விரண்டையும் செயற்படுத்தாவிடின் எரிபொருள் கொள்வனவிற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் மீதான வரி விலக்கு சலுகை வழங்கப்பட வேண்டும் என நிதியமைச்சிடம் கடந்த வாரம் உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளேன்.
இதுவரையில் சாதகமாக பதில் கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்