பருப்பு வாங்க அவுஸ்திரேலியாவிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனைப் பெறும் சிறிலங்கா
அவுஸ்திரேலியாவிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடன் வசதியை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த கடனை பயன்படுத்தி பிரதானமாக பருப்பு மற்றும் பார்லி ஆகியவற்றை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மீதமுள்ள பணத்தில் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்தே பருப்பு மற்றும் பார்லி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் புத்தாண்டு காலம் மற்றும் அடுத்து வரும் மாதங்களுக்கு நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் கடன் உதவி கிடைக்க உள்ளது.
இந்த தொகையானது அடுத்த ஆறு மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய போதுமானதாக இருக்கும்.
இதனை தவிர சீனாவிடம் 10 லட்சம் மெற்றிக் தொன் அரியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்