யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டோர் கைது!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
Australia
By pavan
யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்லவிருந்த 12 பேர் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து இன்று(30) அதிகாலை கைதாகியுள்ளனர்.
அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அடைக்கலம் கொடுத்த நபர்
பருத்தித்துறையை சேர்ந்த 8 ஆண்களும், 4 பெண்களுமே சட்டத்துக்கு புறம்பாக வெளிநாடு செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த உரிமையாளரும் வீட்டில் தங்க அனுமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
