உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! காத்தான்குடியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 30 இளைஞர்கள்
இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடர்ச்சியாக சஹரானின் அடிப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்களை காத்தான்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காத்தான்குடி பகுதியில் இன்று(01) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
சஹரானின் அடிப்படைவாதம்
இந்நிலையில் குறித்த கூட்டத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் மற்றும் நான்கு பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் அதிகாலையில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் கைதுசெய்யப்பட்டவர்கள் ஸஹ்ரான் ஹாசிமின் கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடியிருப்பார்களென காவல்துறையினர் சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |