தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் வெற்றி பெற்ற பசில்! வரவு - செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்
சிறிலங்கா நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் சமர்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சின் துறைகள் மீதான விவாதம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரவு - செலவுத் திட்டம் மீது இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆளும் அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் சிறிலங்கா பொதுசன முன்னணியின், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி உட்பட பங்காளிக் கட்சிகள் இணைந்து 157 வாக்குகள் ஆதரவாக வழங்கப்பட்டது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள். சக்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தி (மக்கள் விடுதலை முன்னணி) ஆகிய கட்சிகளின் இணைந்து 64 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன.