இலங்கையில் லட்சத்திற்கும் மேற்பட்டவர்ளுக்கு கொரோனா தொற்று! சம்பிக்க ரணவக்க தகவல்
srilanka
covid19
corona
colombo
champika ranawakka
By S P Thas
நாட்டில் தற்போது லட்சத்திற்கும் மேற்பட்டவர்ளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே சம்பிக்க ரணவக்க இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் முன்வைக்கும் கொரோனா மரணங்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் குறித்து எவ்வித நம்பிக்கையும் இல்லை.
அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தொடர்பிலும் நம்பிக்கையில்லை என விசேட மருத்துவ நிபுணர்கள் கூட கூறியுள்ளனர்.
உண்மையான மரணங்கள் தொடர்பான உண்மையான புள்ளிவிபரங்களை வெளியிடுவது எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் கடமை எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி