இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கைது
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க, ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டில் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை பதிவு செய்யுமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.
இதற்தமைய, ஓகஸ்ட் 14 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், முன்னாள் வீரருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டது.
இவருக்கு, எதிரான குற்றச்சாட்டுகளுக்கான போதுமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
லங்கா பிரீமியர் லீக் நவம்பர் (27) தொடக்கம் டிசம்பர் 17, 2020 வரை இலங்கையின் அம்பாந்தோட்டையில் நடைபெற்றிருந்தது.
ஊழல் நடைமுறைகள்
38 வயதான அவர், 2020 இல் லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) பங்கேற்கும் இரண்டு கிரிக்கெட் வீரர்களை துபாயில் இருந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் அணுகி, போட்டியின் போது ஆட்ட நிர்ணயம் செய்ய தூண்டினார் என்பதிற்கிணங்க, எல்பிஎல் போட்டியில் ஊழல் நடைமுறைகளுக்கு அவர்களைத் தூண்டியதாக ஒரு ஊடக அறிக்கை குற்றம் சாட்டியது.
எவ்வாறாயினும், இவர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார், அதே நேரத்தில் அவை தன்னை அவதூறு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்று கூறினார்.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கடுமையாக மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.