சேவைகளை மட்டுப்படுத்தியது பதிவாளர் திணைக்களம்!!
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kanna
பதிவாளர் நாயகம் திணைக்களம் தமது சேவைகள் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த ஆணைக்குழுவின் அனைத்து பிரதேச மற்றும் மாவட்ட காரியாலங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகள், காணிப்பதிவு பிரதிகளை வழங்கும் சேவைகள், திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியினுள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களம்
இதேவேளை, தபால் திணைக்களமும் தமது சேவைகளை மட்டுப்படுத்த உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி, தொடரும் நெருக்கடி!! சேவையை மட்டுப்படுத்தியது மற்றுமோர் அரச திணைக்களம்
