தமிழீழத் தேசிய உலகிற்கு தமிழ் பொதுவேட்பாளர் தேவை என வலியுறுத்து
தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தமிழ் பொதுவேட்பாளர் தேவை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் (Uruthrakumaran) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “1972 அரசியல் அமைப்புச் சட்டத்திற்கோ 1978 அரசியல் அமைப்புச் சட்டத்திற்கோ தமிழர்களாகிய நாங்கள் பங்குதாரர்கள் அல்ல, அதற்கு நாங்கள் சம்மதமும் கொடுக்கவில்லை எனவே அது எங்களைக் கட்டுப்படுத்த முடியாது.
தமிழ் பொதுவேட்பாளர்
கடந்த 14 வருடங்களாக நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி, மாகாணசபைத் தேர்தல் என்றாலும் சரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அவையைக் கூட்டி அந்த தேர்தல்களை எவ்வாறு எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு கருவியாகப் பாவிக்கலாம் என்ற அடிப்படையில்தான் நாங்கள் முடிவுகள் எடுத்துள்ளோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடும் இவ்வாறாகத்தான் இருந்திருக்கிறது. இந்நிலையில், இன்று மூன்று தெரிவுகள் இலங்கை தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடையே வைக்கப்பட்டுள்ளன.
முதலாவது சிங்களவர்களுடன் பேரம் பேசி எமக்கு அதிக உரிமைகளை தருபவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். மற்றையது அதிபர் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும். மூன்றாவது தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று இன்று 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தமிழீழத் தேசியம்
இன்றுவரை ஒரு சிங்கள புத்திஜீவியோ, ஒரு சிங்கள அரசியல் தலைவரோ, ஒரு சிங்கள மாணவத் தலைவரோ தாங்கள் செய்த பிழையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை, மன்னிப்பும் கேட்கவும் இல்லை சிங்களவர்களுடன் பேசிய பேரத்தை இந்தியாவினால் கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை.
எனினும், தமிழ் பொதுவேட்பாளர் மூலமாக நாங்கள் ஒரு அரசியல் திரட்சியைக் கொண் வரலாம், சுயநிர்ணயத்திற்கான திரட்சியையும் கொண்டு வரலாம்” என்றும் உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |