ரணிலின் சட்டப்பிடியை மேலும் இறுக்கிய சிஐடியின் முக்கிய கைது...!
அரச தலைவராக இருந்தபோது 16.6 மில்லியன் ரூபா பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் தொடரப்பட்ட வழக்கில், கடந்த (28-01-2026) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகி இருந்தார்.
இதன்போது, ரணிலுக்கு எதிரான வழக்கை அவர் சார்பில் முன்னிலையான சட்டத்திரணிகள் ரத்து செய்யக் கோரிய நிலையில் கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக, அவர் பிணையில் இருந்தபோது சமர்ப்பித்த மருத்துவ அறிக்கைகளின் உண்மைத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதோடு, அவருக்குப் பிணை வழங்கப்பட்ட விசேட சூழ்நிலைகள் குறித்து மேல் நீதிமன்றத்தில் மறுஆய்வு செய்யப்பட வாய்ப்புள்ளமை ரணில் தரப்பிற்குப் புதிய நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.
ஒருபுறம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மார்ச் மாதம் உத்தியோகபூர்வக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மறுபுறம் அவரது முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பது, ரணிலை நோக்கிய சட்டப்பிடியை மேலும் இறுக்கியுள்ளது.
அரசியல் ரீதியாக மீளெழுச்சி பெற முயற்சிக்கும் வேளையில், இந்த நீதிமன்றத் தொடர் நடவடிக்கைகள் ரணிலின் எதிர்காலத்தைத் தடுக்குமா? அல்லது இதுவும் அவரது அரசியல் சதுரங்கத்தின் ஒரு பகுதியா ?
ரணிலை சுற்றி வளைக்கும் தற்போதைய அரசின் கடுமையாக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் மேல் நீதிமன்றத்தின் நிழலில் அவர் சந்திக்கும் சவால்கள் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |