மக்கள் வரிசையில் நிற்க காரணம் என்ன? உண்மையை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்
மக்கள் தற்போது அனைத்திற்கும் வரிசையில் நின்று அவதிப்படுவது தன்னியல்பான நெருக்கடியினால் அல்ல, தவறான முடிவினால் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு இறக்குமதிக்காக இலங்கை 20.6 பில்லியன் டொலர்களை செலவிட்ட போதிலும் எரிபொருள், எரிவாயு, நிலக்கரி மற்றும் மருந்துக்காக $4.6 பில்லியனை மட்டுமே செலவிடப்பட்டது.
தாம் மற்றும் ஏனைய தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க அரசாங்கம் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தால், மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
People are suffering in queues because of a man-made crisis. #SriLanka spent $20.6b for imports in 2021. Only $4.6b for petroleum, LPG, coal & medicine. If Govt restricted import of non essentials a year ago as we demanded, people wouldn’t have suffered in queues now.
— Udaya Gammanpila (@UPGammanpila) March 15, 2022
