போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில்- பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தகவல்
இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்குத் தேவையான எரிபொருள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க (Sumith Wijesinghe) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்கனவே கப்பலில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அவற்றுக்கான டொலர் செலுத்தப்பட்டுள்ள நிலையில் எரிபொருட்களை இறக்கும் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளது.
வீணான அச்சம் காரணமாக நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் தேவையில்லையென நாட்டு மக்களுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகன சாரதிகள் நீண்ட நேரம் காத்திருந்து எரிபொருள்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்