மகாசாகர் தொலைநோக்கில் இலங்கை மையப்புள்ளி: கொழும்பில் இந்தியா அழுத்தம்

Sri Lanka Narendra Modi India
By Dharu Aug 05, 2026 11:09 AM GMT
Report

இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியாவின் அண்டை நாடு முதன்மை (Neighbourhood First Policy) கொள்கையிலும், மகாசாகர்" (Mahasagar) தொலைநோக்கிலும் இலங்கைக்கு மையமான பங்கு இருப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று  வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளியுறவு அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா ஆகியோருடன் தனித்தனியே நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, இந்திய வெளியுறவுச் செயலாளர் இந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் தமிழர் பிரச்சினையில் இந்தியா இல்லாமல் எந்தவொரு நகர்வும் இல்லை! (காணொளி)

இலங்கையின் தமிழர் பிரச்சினையில் இந்தியா இல்லாமல் எந்தவொரு நகர்வும் இல்லை! (காணொளி)

இந்தியாவின் முக்கிய கவனக்குவிப்பு

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நடப்பு ஒத்துழைப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முக்கிய முன்னுரிமைத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மகாசாகர் தொலைநோக்கில் இலங்கை மையப்புள்ளி: கொழும்பில் இந்தியா அழுத்தம் | Srilanka Is The Focal Point Mahasagar Vision India

பரஸ்பர நலன் கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிகள் குறித்து இரு தரப்பும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டன.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வழிகள் ஆராயப்பட்டன.

மேலும் இந்தியாவின் கடல்சார் தொலைநோக்கான மகாசாகர் திட்டத்தை முன்னெடுப்பதில் இலங்கையின் பங்கு முக்கியமானது என விக்ரம் மிஸ்ரி இதன்போது அடிக்கோடிட்டார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் என இந்தியா கருதுகிறது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை விஜயம்

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை விஜயம்

தற்போதைய உயர்மட்ட சந்திப்பு

இன்று காலை நாட்டை வந்தடைந்த வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரியை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்றார்.

மகாசாகர் தொலைநோக்கில் இலங்கை மையப்புள்ளி: கொழும்பில் இந்தியா அழுத்தம் | Srilanka Is The Focal Point Mahasagar Vision India

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

தற்போதைய உயர்மட்ட சந்திப்புகளின் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், முக்கிய ஒத்துழைப்புத் துறைகளை முன்னெடுத்துச் செல்வதுமே இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் இலங்கைக்கு வழங்கும் முதன்மையான முக்கியத்துவத்தையே இந்த சந்திப்புகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷேக் ஹசீனாவின் இணையவழி உரை! இந்தியா மீது அதிருப்தியடைந்துள்ள பங்களாதேஷ்

ஷேக் ஹசீனாவின் இணையவழி உரை! இந்தியா மீது அதிருப்தியடைந்துள்ள பங்களாதேஷ்

ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்