இலங்கையில் பால்மா தட்டுப்பாடு! தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்
srilanka
peoples
milk powder
By S P Thas
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாடு, எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் நிர்வத்தியாகும் என்று பால்மா இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சந்தையில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு. சில இடங்களில் அதிக விலைக்கு பால்மா விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டொலர் பற்றாக்குறை காரணமாக வங்கிகளின் கடன் உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தாமதமடைந்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றமையினால், எதிர்வரும் காலங்களில் பால்மா விலையை அதிகரிக்க நேரிடும் என்றும் அந்த சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தகவல் வழங்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி