உள்நாட்டு பிரச்சினைகளிற்கு தீர்வை கண்ட பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க செல்லுங்கள் : கர்தினால் மல்கம் ரஞ்சித் சீற்றம்
அரசாங்கம் சர்வதேச கடற்பரப்பினை பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கடற்பரப்பிற்கு கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்தை விமர்சித்துள்ள அவர் உள்நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
பொரளை தேவலாயத்தில் இரண்டு வருடங்களிற்கு முன்னர் கைக்குண்டு மீட்கப்பட்டதை குறிப்பதற்காக இடம் பெற்ற விசேட ஆராதனையின்போது இதனை தெரிவித்துள்ள அவர் இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் கைக்குண்டினை வைத்த உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறிவிட்டனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார் ஊடகங்களை துன்புறுத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு இருக்கும் உள்நாட்டு பிரச்சினைகளிற்கு அதிகாரிகள் தீர்வை காண்பதற்குப் பதில் சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |