இரத்தினக்கல் வியாபாரியினால் சிறிலங்காவிற்கு ஆபத்து! சிக்கலில் சீன கோட்டை
பேருவளை சீன கோட்டை பகுதியில் ஒமைக்ரோன் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் நிர்வாக பொது சுகாதார அதிகாரி முதித்த அமரசிங்க (Mudhiththa Amarasinghe) தெரிவித்துள்ளார்
குறித்த நபர் வெளிநாடு செல்ல தயாரான நிலையில், நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மூலக்கூறு பரிசோதனையின் பிரகாரம், அவருக்கு ஒமைக்ரோன் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நபர் இரத்தினக்கல் வியாபாரி என தெரிவிக்கப்படுகின்றது.
தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவருடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பேருவளை பகுதியிலுள்ள அனைத்து இரத்தினக்கல் வியாபாரிகளுக்கும் இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பு, அநுராதபுரம் மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் இதற்கு முன்னர் ஒமைக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 10 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்