இலங்கையில் எல்லை கடந்து சென்றது நிலைமை - அம்பலப்படுத்திய பேராசிரியர்
அதிகரித்து செல்லும் கொரோனா தொற்று காரணமாக அரசாங்கம் வீண்செலவுகளை குறைத்து தேவையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.
நாட்டு மக்கள் உயிருடன் இருந்தால் தான் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட்-19 வைரஸ் பரவல் கடந்த காலங்களை விட தீவிரமடைந்துள்ளது.
பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்தும் மக்கள் அதிக கவனமாக செயற்பட வேண்டும். அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தால் நிலைமை எல்லை கடந்து சென்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. வைத்தியசாலைகளில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் தினசரி அதிகரிக்கிறதே தவிர குறைவடையவில்லை.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,